Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கியூபாவில் ஒருபாலின திருமணங்களை சட்டபூர்வமாக்க மக்கள் வாக்களிப்பு…!



கியூபாவில் ஒரு பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.

குடும்ப சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக கியூப அரசாங்கம் முன்வைத்த திட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.







AFP Photo

இதுவரை எண்ணப்பட்ட வாக்குச்சீட்டுகளின்படி, 66 சதவீதமான மக்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன்படி, ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படவுள்ளது. அத்துடன் வாடகைத் தாய் முறைமை, ஒரு பாலின தம்பதியினர் தத்தெடுப்பதற்கான உரிமை ஆகியன வழங்கப்படவுள்ளன.







AFP Photo

1959 ஆம் ஆண்டு பிடெல் கஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ புரட்சிக்குப் பின்னர் ஓரின சேர்க்கையாளர்களான ஆண்களும் பெண்களும் மீள் கல்விக்காகவும் வேலைக்காகவும் முகாம்களுக்கும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த சில தசாப்தங்களில் முன்னாள் ஆட்சியாளர் ரவுல் கஸ்ட்ரோவின் மகளான மரியேலாவின் முன்னெடுப்புகளின் காரணமாக ஓரின சேர்க்கையாளர்கள் மீதான அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.



AFP Photo

தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி மிகுவெ; டயஸ் தலைமையிலான கியூபா அரசாங்கம் நாடு முழுவதும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தது.

எனினும், மத அமைப்புகள் மற்றும் பழைமைவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments