Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பலத்த காற்றுடன் கூடிய மழை: கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை!


தென்மேற்கு பருவ மழை காரணமாக எதிர்வரும் 24 மணி நேரத்தில் புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பரப்பு கொந்தளிப்பாகவும், அப்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கடற்பரப்புகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை கடல் அலை உயரக் கூடும் எனவும், அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இன்‍றைய தினம் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

‍மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின்போது மண்சரிவு, பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ளவதற்கு, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments