Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு சந்தர்ப்பம் வழங்கும் யாழ். இந்துக் கல்லூரி...!


வன்னி பிரதேசம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தை சேர்ந்த, பொருளாதார ரீதியாக பின்தங்கிய, உயர் தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயில ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தமது பாடசாலையில் சந்தர்ப்பம் வழங்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான விடுதி வசதியை இலவசமாக வழங்கவும் பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக கற்பிக்கவும் யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் தயாராகவுள்ளதாக பாடசாலை அதிபரின் கையொப்பத்துடன் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

தேவைப்படுமிடத்து மாணவர்களுக்கான மேலதிக பொருளாதார உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில், பின்தங்கிய நிலையில் வசிக்கும் 30 மாணவர்களுக்கு 2024 ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கான அனுமதியை வழங்கவுள்ளதாகவும் ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்லூரி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments