Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மார்ட்டின் சுங்கோங் நேற்று இலங்கை வருகை...


பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் (Inter-Parliamentary Union) செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் (Martin Chungong) நேற்று இரவு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அழைப்பையேற்று அவர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.

குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மார்ட்டின் சுங்கோங்கை வரவேற்றுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்தது.

மார்ட்டின் சுங்கோங் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments