Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை...!


எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மறைந்த 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியைகள் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றையதினத்தை அரசாங்கம் விசேட விடுமுறைதினமாகவும் துக்கதினமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பாடசாலைகளுக்கும் குறித்த விடுமுறையை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அன்றைய தினத்தை விடுமுறை தினமாக கருதி செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments