Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உணவுப் பாதுகாப்பு, போசாக்கை உறுதிப்படுத்த பொறிமுறை...!


பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மிகவும் சவால்மிக்க விடயமாக உணவுப் பாதுகாப்பு அடையாளங் காணப்பட்டுள்ளது. உள்ளுர் விவசாய உற்பத்திகள் குறைவடைந்தமையாலும், சர்வதேச ரீதியில் விலையேற்றம் போன்ற இப்பிரச்சினை மேலும் தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலைமையின் கீழ் தொடர்ந்துவரும் காலங்களில் மோசமான உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் விலைஅதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால், அது உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும்.

சமகால பொருளாதார நெருக்கடிகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல் மற்றும் குடும்ப வருமானங்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கங்களால் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்கள் மேலும் மோசமடைந்துள்ளன.

உள்ளுர் பண அலகு வீழ்ச்சியடைந்துள்ளமையால் இறக்குமதி விநியோகங்களில் ஏற்பட்ட மட்டுப்பாடுகளால் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

அதற்கமைய, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக துரித படிமுறைகளாக அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கான குறுகியகால தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காக தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு சபை மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான பல்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments