Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வயோ­தி­பர்­க­ளிடம் கொள்­ளை­ய­டித்த தாய், மக­ளுக்கு சிறை...!


வயோ­தி­பர்­க­ளிடம் பணம், வங்கி அட்­டை­களை திரு­டி­வந்த குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான 57 வயது பெண்­ணுக்கும் 27 வய­தான அவரின் மக­ளுக்கும் பிரித்­தா­னிய நீதி­மன்­ற­மொன்று சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

டியோன் கிளார்க் (57), செரால் கிளார்க் (27) ஆகி­யோரே இவ்­வாறு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இங்­கி­லாந்தின் ரம்ஸ்கேட் மற்றும் கென்ட் பிராந்­தி­யங்­களில் இவர்கள் கொள்­ளைகள், திருட்­டுகள், மோச­டி­களில் ஈடு­பட்டு வந்­தனர் என கென்­ட­பறி கிறவுண் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த மே மாதம் சுப்­பர்­மார்கெட் வாகனத் தரப்­பி­டத்தில் ஆண் ஒரு­வரின் பணப்­பையை இவர்கள் அப­க­ரித்­தனர் எனவும், கடந்த ஜன் மாதம் பெண்­ணொ­ரு­வ­ருக்கு உத­வு­வ­தாக நடித்து அவரின் பணப்­பையை திரு­டினர் எனவும் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டது,

இப்­பெண்கள் கைது செய்­யப்­பட்­ட­போது, திரு­டப்­பட்ட வங்கி அட்­டைகள் பல­வற்­றையும் அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்­தனர்.

அதை­ய­டுத்து மது­பானம், சிகரெட் போன்­ற­வற்றை வாங்­கு­வ­தற்­காக இவர்கள் கொள்­ளை­க­ளிலும் திருட்­டு­க­ளிலும் ஈடு­பட்­டனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இப்­பெண்கள் தம்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை நீதி­மன்­றத்தில் ஒப்­புக்­கொண்­டனர்.

செரலே கிளார்க்­குக்கு 5 வருட சிறைத்தண்டனையும் அவரின் தாயார் டியோன் கிளார்க்குக்கு 3 வருடங்கள் மற்றும் 8 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments