Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இலங்கை அணி...!


ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2022 தொடரின் அரையிறுதி போட்டியில், ஹொங்கொங் அணியை வென்ற இலங்கை அணி, இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் இன்று (10) சனிக்கிழமை இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் 67 - 43 என ஹொங்கொங் அணியை வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கை வலைப்பந்தாட்ட அணி இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கபூர், ஹொங்கொங் அணிகளை வீழ்த்தி தொடரில் தொடர்ந்தும் தோல்வியுறாத அணியாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



இதைப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் எதிர்வரும் வருடம் தென்னாப்பிரிக்காவில் இடம் பெற உள்ள வலைப்பந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணியுடன் இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

Post a Comment

0 Comments