Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜப்பான், பிலிப்பைன்ஸ் நோக்கி ஜனாதிபதி பயணம்; பதில் அமைச்சர்கள் நியமனம்...!


ஜனாதிபதி வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் அவரது அமைச்சுகள் தொடர்பில பணியாற்றுவதற்காக, அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

குறித்த அமைச்சுகளின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனையடுத்து ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 28 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்கின்றார். இதன் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்புவார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments