Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமெரிக்க தலைமை அதிகாரி சமந்தா பவர் சனிக்கிழமை இலங்கை வருகின்றார்...!


இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இலங்கைக்கான விஜயம் குறித்தும் எதிர்கால அமெரிக்க உதவி திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்க உள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த ஜுலை மாதம் 25 – 27 திகதிகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர், இதன் போது இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் நாட்டில் காணப்பட்ட போராட்டங்கள் மற்றும் அரசியல் குழப்ப நிலை காரணமாக அவரது இலங்கைக்கான விஜயம் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் போன்ற விடயங்களில் சமந்தா பவர் கூடுதலாக அவதானம் செலுத்தக்கூடியவர்.

இம்மாதம் மாதம் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சு வார்த்தைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்களை எதிர்கொள்கின்ற நிலையில் அமெரிக்காவின் ஒத்துழைப்புகள் இலங்கைக்கு அத்தியாவசியமாகின்றது.

இவ்வாறானதொரு தருணத்தில் சமந்தா பவரின் இலங்கை விஜயம் அமைகின்றமை முக்கியமானகதாகவே கருதப்படுகின்றது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments