Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

IMF ஒப்பந்தம் குறித்து இதுவரை அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை – ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவிப்பு...!


சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இதுவரை அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ஊழியர் மட்ட உடன்படிக்கை என்ற போதிலும், அதற்கும் IMF பணிப்பாளர்களின் அனுமதி அவசியமாகும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

அத்துடன், இதற்கு முன்னர் கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி, அந்த நாடுகள் வழங்கும் அறிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுடன் அதுவரை எவருக்கும் இது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியாது எனவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments