Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ.15,000


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபா வழங்கப்படுமென பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு தாம் அனுமதித்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் அவர்களுக்கு 15,000 ரூபாய் முற்பணம் கிடைக்குமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதே நேரம், ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இம்முறை 10,000 ரூபா தீபாவளி முற்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments