
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் இன்று இடம்பெறும் ஏ குழுவுக்கான போட்டி இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்று வருகிறது.
இப்போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் நெதர்லாந்து அணி வெற்றிபெற 20 ஓவர்களில் 163 ஓட்டங்களைப் பெற வேண்டும்.
இப்போட்டியில் கட்டாயம் இலங்கை அணி நெதர்லாந்து அணியை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அவ்வாறு வெற்றிபெற்றால் மாத்திரமே இலங்கை அணிக்கு இருபது - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட முடியும்.

மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
குசல் மெண்டிஸ் 44 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும் சரித் அசலன்க 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட பானுக்க ராஜபக்ஷ 19 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
நெதர்லாந்து பந்துவீச்சில் போல் வென் மிக்கெரென் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட்ஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தற்போது நெதர்லாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது.
0 Comments