Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பங்களாதேஷில் சூறாவளி தாக்கி 16 பேர் உயிரிழப்பு...!



பங்களாதேஷில் வீசிய சிட்ரங் சூறாவளியில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் சுமார் ஒரு மில்லியன் பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

துறைமுகப் பகுதிகளில் சுமார் 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதோடு தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

தெற்கு பங்களாதேஷில் கடந்த திங்கட்கிழமை பின்னேரம் இந்த சூறாவளி கரையை அடைந்தபோதும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதில் மரங்கள் விழுந்து 14 பேர் உயிரிழந்திருப்பதோடு படகு மூழ்கி மேலும் இருவர் பலியாகி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments