Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனா அன்பளிப்பு செய்த 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது...!


உதவி அவசியமான மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பு
மேலும் 500 மெ.தொ. அரிசி எதிர்வரும் வந்தடையும்
இதுவரை சீனா 6,000 மெ.தொ. அரிசி அன்பளிப்பு


சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நேற்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உதவி தேவைப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, சீனத் தூதரகம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

10 கி.கி. கொண்ட 50,000 பொதிகளில் இவை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசி எதிர்வரும் வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், குறித்த அரிசி தொகையுடன் சீனா இதுவரை 6,000 மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக, சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments