Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இல்லறத்தில் ஆர்வம் குறைவதற்கு என்ன காரணம் தெரியுமா? ஆய்வு முடிவில் தெரியவந்த செய்தி இதோ!

image

இல்லற உறவு குறித்து பொதுவெளியிலோ அல்லது நண்பர்கள் இடத்தில் பேசுவதோ, கலந்தாலோசிப்பது என்றாலே இந்த 21வது நூற்றாண்டிலும் பலருக்கும் வேப்பங்காயாக கசக்கிறது.

அதுவும் பெண்களுக்கு நேரும் இல்லறம் சார்ந்த பிரச்னைகளை பெண்களிடம் பகிர்வதற்கும், அதுகுறித்து பேசி தெளிவு பெறுவதற்கும் இந்திய சமூகத்தில் எப்போதுமே ஒரு வித எதிர்ப்பும் அயர்ச்சியுமே இருக்கும். ஏற்கெனவே இருக்கும் உள்ளக் குமுறல்களில் பாலியல் ரீதியான சங்கடங்கள், சந்தேகங்கள் குறித்து கேள்விகளும் இன்னும் மன அழுத்தங்களையே ஏற்படுத்தக் கூடும்.

இப்படி இருக்கையில், ஆரோக்கியமாக பாலியல் உறவு கொள்வதால் மனக்கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம், இதய நோய் ஏன் உடல் எடையில் கூட குறிப்பிடத்தக்க மாற்றங்களை காண முடியும் என பல நிபுணர்கள், மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

image

இருப்பினும் 70 சதவிகித பெண்கள் பாலியல் உறவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பதாகவும், ஒரு கட்டத்துக்கு மேல் இல்லற வாழ்வில் இல்லாமல் இருப்பது சமூகத்தில் தடைசெய்யப்பட்டதாக இருப்பதாக 53 சதவிகிதம் பேர் கருதுவதாகவும் ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு தங்களுடைய மாதவிடாய் காலம் முடிந்த பிறகு அதாவது மெனோபஸ் காலத்தை எட்டும் போது பாலியல் உணர்வில் நாட்டமில்லாமல் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு குறைந்த லிபிடோ ஏற்பட என்ன காரணம்?

பாலியல் உணர்வு குறைவதற்கு பல காரணிகள் இருந்தாலும் குறிப்பாக மன அழுத்தத்திற்கு எதிராக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போதும், மன அழுத்தமாக இருக்கும் போதும், மாதாவிடாய் காலம் முடிந்த பிறகு (மெனோபஸ்) low libido எனக் கூறக்கூடிய நிலை பெண்களுக்கு ஏற்படுகிறதாம்.

அதில் 72 சதவிகிதம் பெண்கள் மன அழுத்தத்திற்கு எதிராக மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு இல்லற உறவில் ஈடுபாடு இல்லாதவர்களாகவும், 82 சதவிகிதம் பேர் தூண்டுதல் உணர்வே இல்லாமலும், 42 சதவிகிதம் பேர் செரடோனின் மறு உருவாக்கத்தில் தடுப்புகள் இருப்பதால் ஆர்கசம் நிலை அடைவதில் சிக்கல் இருப்பதாகவும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

image

மனக்கவலையும், மன அழுத்தமும்தான் இவற்றுக்கெல்லாம் மூலக் காரணியாக இருக்கிறதாம். மெனோபஸ் நிலையில் இருக்கும் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படுவதாலும் அவர்களுக்கும் பாலியல் உறவில் ஈடுபாடு குறைவாக இருக்குமாம்.

குறைந்த லிபிடோவை சீர் செய்ய என்ன வழி?

பொதுவாக உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு பாலியல் உறவில் ஈடுபாடு குறைவது வழக்கம்தான். ஆனால் தங்களுடைய உடல் அமைப்பு மற்றும் தோல் நிறம் குறித்து அதீத நம்பிக்கையில் இருப்பதும் பாலியல் உணர்வு நேர்மறையான விளைவுகள் ஏற்பட காரணமாக அமையும்.

அமெரிக்க ஆய்வறிக்கையின் படி, சொந்த உடலின் மீதான அதிருப்தியான மனநிலை பாலுணர்வின் கூறுகளான ஆர்கசம் அடைவது, தூண்டுதல் நிலை மற்றும் ஆசை போன்றவற்றை பாதிப்படையச் செய்வதாக கூறுகிறது.

ஆகவே இணையர்கள் தனித்தனி அறைகளில் தூங்குவதுதான் low libidoக்கு எதிராக செயல்பட தனித்துவமான வழியாக இருக்குமாம். ஏனெனில் பாலியல் உறவில் அதிகளவில் நாட்டமில்லாமல் ஒரே அறையில் படுத்து உறங்குவதால் பாலியல் ரீதியான அழுத்தமே ஏற்படும்.

குறிப்பாக இல்லற உறவில் ஒருவருக்கு லிபிடோ குறைவாகவும் மற்றொருவருக்கு அதிகமாகவும் இருந்தால் அது அழுத்தத்தையே கொடுக்குமாம். எனவே உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க சிறிது இடைவெளியை பராமரிப்பது நல்லதுதான் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments