Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இரண்டாவது உலக போருக்கு பின்னர் அபாயகரமான தருணம் – எச்சரிக்கை விடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி...!


இரண்டாவது உலக போருக்கு பின்னர், உலகம் எதிர்கொள்ளும் மிக அபாயகரமான யுகமாக இந்த தருணம் பெரும்பாலும் இருக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நேற்றைய தினம் (ஒக்.27) நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுக்ரேனுடனான போரை, நியாயப்படுத்தி ரஷ்ய ஜனாதிபதி இதன்போது கருத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அணுஆயுதத் தாக்குதல் தொடர்பில் பலவந்தமாக மேற்குலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் அணுவாயுதப் பிரயோகம் தொடர்பில் தமது நாடு வலுவான கருத்தை வெளியிடவில்லை எனவும் மேற்குலக நாடுகளின் தலைவர்களின் அறிக்கைகளையே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு நேச நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காதது தமக்கு ஆச்சரியமளிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments