பங்களாதேஷில் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு நாட்டின் பெரும்பகுதி பல மணி நேரம் இருளில் மூழ்கியது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் துண்டிக்கப்பட்ட மின்சாரம் ஏழு மணி நேரத்தின் பின் இரவிலேயே மீண்டும் வந்தது. மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் உடன் உறுதி செய்யப்படவில்லை.
கேள்வி மற்றும் விநியோகம் அதிகரிக்கும்போது இவ்வாறு கோளாறு ஏற்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதனால் தலைநகர் டாக்காவில் உள்ள பெரும்பாலான மிகப்பெரிய கடைகள் முன்கூட்டியே மூடப்பட்டன. பல இடங்களிலும் மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு டீசல் பெற பலரும் எரிபொருள் நிலையங்களில் குவிந்தனர்.
0 Comments