Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு...!


அம்பாறை மற்றும் கல்முனை நகரங்களில் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய இரண்டு போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அம்பாறை, புத்தங்கல வீதி மற்றும் கல்முனை பள்ளி வீதி ஆகியவற்றில் இயங்கிய இரண்டு போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களே சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 கடவுச்சீட்டுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், பெயர் பலகை பதாகைகள் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments