Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் : அவுஸ்திரேலிய பொலிஸாரால் இருவர் கைது…!


இலங்கையில் கொந்தராத்து ஒப்பந்தகளைப் பெறுவதற்காக லஞ்சம் வழங்க திட்டமிட்ட குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் (ஏ.எவ்.பி) தெரிவிததுள்ளனர்.

சிட்னியியின் புட்னி நகரைச் சேர்ந்த 67 வயதான ஒருவரும் சிட்னியின் நியூ டவுன் நகரைச் சேர்ந்த 71 வயதான ஒருவரும் கடந்த செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர் எனவும் இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக தம்மால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெவித்துள்ளார்.

இலங்கையில் 8.8 மில்லியன் டொலர்களுக்கு அதிக பெறுமதியான, உட்கட்டமைப்புத் திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெவதற்கு வெளிநாட்டு அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவதில் SMEC Holdings Pty Ltd நிறுவனத்தின் துணை நிறுவனமான அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட SMEC International Pty Ltd, நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், வெளிநாட்டு அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கவதற்காக 304,400 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு அதிகமான தொகையை ஏற்பாடு செய்வதற்கு மேற்படி நபர்கள் சதி செய்தனர் என அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments