Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய வானிலை அறிக்கை...!


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை


- ஊவா, கிழக்கு, வடமத்தியில் 75 மி.மீ. வரை பலத்த மழை-

இன்றையதினம் (11) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசலாம் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments