மத்திய ஆபிரிக்க நாடான கெமரூனில் தோலை வெளுக்க வைக்கும் அழகுப்பொருட்கள் பெரிதும் பிரபலமடைந்துள்ளன.
அவற்றால் உடல்நலத்துக்கு ஆபத்து என்றபோதும் அங்கிருக்கும் மக்களில் பலர் அவற்றை நாடுவதாக நம்பப்படுகிறது.
அங்கு விற்கப்படும் அழகுப் பொருட்களில் பல, அறிவியல் ரீதியாகச் சோதிக்கப்படவில்லை என்றும் அவற்றில் அபாயகரமான அளவில் இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதுபோன்ற அழகுப் பொருட்கள் உடலில் மெலனின் உற்பத்தியைத் தடுக்கின்றன.
உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் மெலனின் என்ற பொருள் சூரிய ஒளியிலிருந்து உடலுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது. உடலில் போதிய மெலனின் இல்லை என்றால் சூரிய ஒளியால் தோலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம்.
கெமரூனில் விற்கப்படும் தோலை வெளுக்கும் அழகுப்பொருட்கள் சிலவற்றில் மற்ற நாடுகளில் ரத்துச் செய்யப்பட்ட இரசாயனங்களும் கலந்திருக்கின்றன.
அவற்றில் ஒன்று ஹைட்ரோக்கினோன். அதனை ஐரோப்பிய ஒன்றியம் 2001ஆம் ஆண்டிலிருந்து ரத்து செய்துள்ளது.
ஹைட்ரோக்கினோனால் உடலில் புற்றுநோய் உருவாகலாம், மரபணு ரீதியான மாற்றங்கள் ஏற்படலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய ஆபத்து விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் உள்ள அழகுப்பொருட்களைக் கெமரூனிலுள்ள சிலர் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
0 Comments