Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்: சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம்


எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடிப்படையில் சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுவில் ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் கட்சி பதவி தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் துணைத் தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சபாநயகர் மு.அப்பாவுவிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மு.அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடிப்படையில் சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுவில் ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments