அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இன்று இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார். காலை 10 மணியளவில் வழக்கமான பயணத்தின் போது தவாங் பகுதிக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு விமானி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும் விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments