Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பல இ.போ.ச. பஸ்கள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தம்...!


வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ் வண்டிகள் உள்ளிட்ட பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த 5 பாடசாலை பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச் சொந்தமான பஸ் வண்டிகளும் பொதுப் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கொடக்கவெல டிப்போவுக்கு சொந்தமான குறித்த 5 பஸ் வண்டிகளுக்கு தேவையான என்ஜின் உதிரிப்பாகங்கள், கியர் பொக்ஸ்களின் உதிரிப்பாகங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு காணப்படுவதால் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும், சில பஸ் வண்டிகளுக்கு குறித்த உதிரிப்பாகங்கள் பொறுத்தப்பட்டு திருத்தப் பணிகள் மேற்கொண்ட வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பஸ் வண்டிகளின் டயர், டியூப், பெட்டரி ஆகியவற்றை கொண்டு வந்து பாவனையிலிருந்து அப்புறுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments