கத்தாரில் தனது 20வது கிளையை Pearl-Qatarல் LULU குழுமம் நேற்று (16.11.2022) முதல் உத்தியோக பூர்வமாக திறந்துள்ளது.
புதிய LULU கிளையாளது உலக தரத்திலான பல புதிய வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விஷேட தரிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் குழுமத்தின் நிறுவனர் ஜனாப். யூஸுப் அலி அவர்கள் கலந்து கொண்டார்கள். அத்துடன் கத்தார் வணிக அமைச்சின் பிரமுகர்களும், கத்தாருக்கான இந்தியத் தூதுவர் மற்றும் கத்தாருக்கான இலங்கைத் தூதுவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
உலக தரத்திலான அனுபவத்தினை பெற்றிடவும், அனைத்து வகையான பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளவும் தங்களை நாடி வருமாறு LULU குழுமம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிகழ்வில் LULU குழுமம் ஸ்தாபகர் ஜனாப். யூஸுப் அலி உரையாற்றும் போது கத்தாரில் நடைபெறவுள்ள கால்ப்பந்து உலகக் கோப்பை போட்டி நிகழ்ச்சிகளைக் காண கத்தாருக்கு வருகை தந்துள்ள ரசிகர்களுக்கு தரமான சேவையை வழங்க தாயராக உள்ளோம் என்றார்.
0 Comments