Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சீன தொழிற்சாலையில் தீ; 36 பேர் உயிரிழப்பு...!


மத்திய சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் இருவர் காணாமல்போயிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது.

ஹனான் மாகாணத்தில் ஹன்யான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே கடந்த சனிக்கிழமை இரவு தீ ஏற்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இது பற்றி மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பொது பாதுகாப்பு, அவசரப்பிரிவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார விநியோக பிரிவுகள் அவசர கையாளுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒரே நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பின் இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தவிர, மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை.

பலவீனமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் வடக்கு தியான்ஜினில் உள்ள இரசாயன களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 165 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments