Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

9 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV - C54 - முழு விவரம்!



ஒரு புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை PSLV C54 ஏந்தி செல்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:56க்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர். அகலம் 4.8 மீட்டர். 321 டன் எடை கொண்டது. இது PSLV XL வகையைச் சேர்ந்த ராக்கெட் ஆகும். நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில், முதல் அடுக்கில் புவிநோக்கு செயற்கைக்கோள் உட்பட எட்டு நானோ செயற்கைக்கோள்களும் இடம்பெறுகின்றன. அடுத்த மூன்று அடுக்குகளும் ராக்கெட்டின் உந்து சக்திக்காக பயன்படுத்தப்படுகிறது. திரவ - திட - திரவ எரிபொருள்கள் அடுத்தடுத்த அடுக்குகளில் உந்துவிசைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. பூமியிலிருந்து முதல் சுற்றுவட்ட பாதைக்கு ராக்கெட் செல்வதற்கு 7116 கி.மீ கோண அச்சில் பயணிக்கிறது. இரண்டாவது சுற்று வட்ட பாதைக்கு 6889 கி.மீ கோன் அச்சில் பயணிக்கிறது. PSLV ராக்கெட் இயக்கப்பட்ட ஏவு பயணங்களில் 94% வெற்றி கண்டுள்ளது.

முதன்மை செயற்கைக்கோள் (EOS-06) 732.5 கிலோமீட்டர் உயரத்தில் ஆர்பிட்-1ல் பிரிக்கப்படும். PSLV-C54 வாகனத்தின் உந்துவிசை வளையத்தின் மூலம் இரண்டு ஆர்பிட் சேஞ்ச் த்ரஸ்டர்களை (OCTs) பயன்படுத்தி பின்னர் சுற்றுப்பாதை 2க்கு மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புவி நோக்கு செயற்கைக்கோள்... EOS - 06

புவி நோக்கு செயற்கைக்கோள் ஆறு, மூன்றாம் தலைமுறை செயற்கைக்கோளான ஓஷன் சாட் -2 தொடரை சார்ந்ததாகும். இதன் எடை 1117 கிலோ. கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப மாறுபாடு, கடற்பரப்பில் ஏற்படும் நிற வேறுபாடுகள், எண்ணெய் கசிவு, கடற்கற்றைன் கடற்பரப்பின் பண்பு நலன்களை கண்டறிய EOS 06 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு ஓசன் சாட் செயற்கைக்கோள் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏவப்பட்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



எட்டு நானோ செயற்கைகோள்...

1) இந்தியா பூடான் சாட்

இஸ்ரோ நானோ செயற்கைக்கோள் -2 பூடானுக்காக இந்தியா தயாரித்த தொலை உணர்வு செயற்கைக்கோள். Nano MX, APRS - Digipeater ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் இந்திய விண்கலத்தில் பயணிக்க உள்ளது. Optical imaging காக அனுப்பப்படுகிறது.

எடை - 18.28 கிலோ

2) ஆனந்த்

சிறிய புவிநோக்கு செயற்கைக்கோளாக இது செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தனியாரால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் பூமியின் தாழ்நிலை வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. தொலைத்தொடர்பு மின்சாரம் தொலை உணர்வு போன்ற சென்சர்களும் இந்த செயற்கைக்கோளில் இடம் பெற்றுள்ளன.

எடை - 16.51 கிலோ

3) ஆஸ்ரோகாஸ்ட்

இணைய சேவைக்காக அனுப்பப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 சிறிய செயற்கைக்கோள்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

எடை - 17.92 கிலோ

4) தைபோல்ட்

துருவா என்கிற தனியார் செயற்கைக்கோள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இரண்டு தைபோல்ட் செயற்கைக்கோள்கள் இடம் பெற்றுள்ளன. தொலைத்தொடர்பு தொலை உணர்வு அலைக்கற்றை போன்றவற்றிற்காக இவை அனுப்பப்படுகிறது. இதன் ஆயுட்காலம் ஒரு ஆண்டு எனக் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments