Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கதை திருட்டு - சர்ச்சையில் சிக்கிய அட்லீ...!



இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான ‘பேரரசு’ படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக விசாரித்து உரிய விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.”
இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படம் ‘மௌன ராகம்’ படத்தைப் போல் இருப்பதாகவும் ‘மெர்சல்’ படம் ‘மூன்று முகம்’ படம் போல் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments