இஸ்ரேலின் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஓமான் கடற்பரப்பில் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈரான் இஸ்ரேல் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓமான் கடலோரத்தில் செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது நாங்கள் இதனை விசாரைணை செய்து வருகின்றோம் என குறிப்பிட்ட பகுதியில் கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
லைபீரிய கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த பசுபிக் ஜேர்கோன் என்ற எண்iணை கப்பலே ஆளில்லா விமான தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.
எண்ணெய் கப்பல்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஏவுகணை தாக்குதலிற்கு உட்பட்டுள்ளது, நாங்கள் கப்பலில் உள்ளவர்களுடன் தொடர்புகொண்டுள்ளோம் காயங்களோ கடல்மாசடைதலோ இடம்பெறவில்லை என குறிப்பிட்ட கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது..
கப்பலின் மேல் பகுதியில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் அதனால் பாதிப்புகள் இல்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலிற்கு எவரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் ஈரான் மீதே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
0 Comments