திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் காரணமாக சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் மற்றும் பிக் பாஸ் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் அரசியல் செயல்பாடுகள் என பிஸியாக இருந்து வந்த கமல் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது, அவரது ரசிகர்களிடமும் கட்சி தொடண்டர்களிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கமல் தரப்பினர் எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதற்கிடையில் அவர் இன்று (நவ. 24) காலை டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 Comments