Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கொடுப்பனவு கோரும் ஆசிரியர்கள்...!


ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அரசு ஊழியர்கள் அவர்களுக்கு வசதியான உடையில் பணிக்கு வரம் வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது என்று சொன்னால், அது பொதுவான முடிவாக இருக்க வேண்டும். ஆடை விடயத்தில் வெவ்வேறு நபர்களால் முடிவெடுக்க முடியாது. எனவே, அமைப்பு இல்லாமல் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தால், நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம். தற்போது உள்ளதை அப்படி மாற்ற முடியாது. இப்போது சேலை அணிவதில் வெளிப்படையாக எந்தப் பிரச்சினையும் இல்லை.

எதிர்காலத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவித நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர்களுக்கு சீருடை கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் விரும்பி சேலை அணிவார்கள். அது பிரச்சனை இல்லை. இது கட்டாயமாக்கப்பட்டால், நாங்கள் நிச்சயமாக கொடுப்பனவை பெறுவோம்."

Post a Comment

0 Comments