எதிர்வரும் வார இறுதியில் (26 மற்றும் 27) இரண்டு நாட்களுக்கு இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 மண்டலங்கள் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
அனல் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு மணி நேரமாக மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளது.
0 Comments