Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அதிக உப்பு சேர்ப்பது மூளையை பாதிக்கிறதா? - பிரச்னைகளும், தீர்வுகளும்...!தினசரி நாம் உண்ணும் உணவில் சுவைக்காக உப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசர காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளில் அதிக உப்பு இருப்பதை மறந்து நாம் உண்கிறோம். 

உடலுக்கு தேவையான் அளவைத் தாண்டி அதிக உப்பு உணவுகளை உண்பது அறிவாற்றல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் டிமென்ஷியா போன்ற ஞாபக மறதி பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கிறது மருத்துவ கூற்றுகள். இதுதவிர அதிக உப்பானது, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். தினமும் அதிகப்படியான உப்பை சேர்த்துக்கொள்வது, உடலின் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹைபோதாலமிக் பிட்யூட்டரி அட்ரீனல் சுரப்பை தூண்டி அழுத்தத்தை அதிகரிக்கும்.டிமென்ஷியா என்றால் என்ன?

நினைவுகள், சிந்தனை, நடத்தை, கற்றல் திறன், மொழி மற்றும் அன்றாட செயல்பாடுகளைச் செய்யும் திறன்களை பாதிக்கும் ஒரு நோய்தான் டிமென்ஷியா(Dementia). இது பெரும்பாலும் வயதானவர்களையே பாதித்தாலும், வயதுடன் தொடர்புடையது அல்ல. உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோறும் 10 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர். டிமென்ஷியா பெரும்பாலும் 60 -70% பேரிடம் அல்சைமர் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. காரணம் அல்சைமர் அல்லது பக்கவாதம் போன்ற மூளையை பாதிக்கும் பலவிதமான நோய்களால் மற்றும் தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் டிமென்ஷியா ஏற்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல; பல பிரச்னைகளே டிமென்ஷியாவிற்கு வழிவகுக்கிறது.

டிமென்ஷியாவின் அறிகுறிகள்:ஞாபக மறதி
வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் அல்லது தொடர்புகொள்வதில் சிரமம்
பார்ப்பதில் சிரமம்
பகுத்தறிவதில் சிரமம்
சிக்கலான பணிகளை கையாள்வதில் சிரமம்
திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தலில் சிரமம்
அதிக உப்பு சேர்த்தல் எப்படி டிமென்ஷியாவிற்கு வழிவகுக்கிறது?

மெடிக்கல் நியூஸ் டுடேவின் கூற்றுப்படி, அதிக உப்பு சேர்ப்பதால் இண்டெர்லெகின் -17 என்ற மூலக்கூறானது மூளை செல்கள் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி செய்வதை தடுக்கிறது. இது ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் சீராக இருப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. போதுமான நைட்ரிக் ஆக்சைடு கிடைக்காதபோது ரத்த ஓட்டமானது 25% குறைவாக செல்வதால் டிமென்ஷியா பிரச்னை ஏற்படுகிறது.

அதிகப்படியான உப்பானது, அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணமான Tau (மூளையிலுள்ள புரதம்) உற்பத்தியை அதிகரிக்கிறது. பொதுவாக நுண்குழாய்கள் எனப்படும் கட்டமைப்புகளை நிலைப்படுத்த நியூரான்களுக்கு உதவிசெய்கிறது Tau. இது நியூரான்களின் ஆக்சான்கள் மற்றும் டென்ட்ரைட்டுகளுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது. மேலும் சைட்டோஸ்கெலட்டனில் இருந்து பிரிந்து அதன் மூலம் மூளையில் உருவாகும் Tau, அறிவாற்றல் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.உப்புக்கு மாற்று உணவுகள்

உப்புக்கு மாற்றாக, அதேசமயம் ஆரோக்கியமான சுவையூட்டிகள் நிறைய இருக்கிறது என்கிறது ஹெல்த்லைன். அவற்றில் சில:

பூண்டு: மிகவும் ஆரோக்கியமான மூலிகைகளில் ஒன்றான பூண்டு, சோடியத்தின் அளவை கூட்டாமல் உணவுக்கு சுவையைக் கொடுக்கிறது. இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளதால், ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை தள்ளியே வைக்கிறது. அதேசமயம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

கருப்பு மிளகு:சால்ட் அண்டு பெப்பர் சிறந்த காம்பினேஷனாக பார்க்கப்பட்டாலும், அதில் ஒன்றை கைவிடுவதால் மற்றதையும் விடவேண்டிய அவசியம் இல்லை. சூப், முட்டை, பாஸ்தா, ரோஸ்ட் மற்றும் நிறைய கார உணவுகளுக்கு பெப்பர் சிறந்த காம்பினேஷனாக பார்க்கப்படுகிறது. மூளை மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் அழற்சிகளை கரும் மிளகு குறைக்க உதவுகிறது.

பால்சாமிக் வினிகர்: இது மிகவும் நெடிய மற்றும் புளிப்பு சுவைமிக்கது. பெரும்பாலான உணவுகளில் உப்புக்கு பதிலாக சேர்க்கப்படுகிறது.

இஞ்சி: இது மண்ணுக்கடியில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகைப்பொருள். அழற்சி எதிர்ப்புப்பொருளான இஞ்சி, இனிப்பு மற்றும் கார உணவுகளில் சேர்க்கப்படுகிறது. சாஸ்கள், மேரினேட், சூப் மற்றும் பிற உணவுகளில் உப்புக்கு பதிலாக இஞ்சியை சேர்ப்பது சிறந்த ஆப்ஷன்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments