வியட்நாமில் மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் படகின் மாலுமி இருக்கவில்லை என மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
LADY R3 படகு மூழ்கிய சந்தர்ப்பத்தில் படகை மாலுமி கைவிட்டுச் சென்றுள்ளதாக மீட்கப்பட்ட இலங்கையர்களை மேற்கோள் காட்டி வியட்நாம் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
Vung Tau மாகாணத்தின் கரையோர பாதுகாப்பு கமாண்டர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையிலிருந்து குழுவாக மியன்மாருக்கு பயணித்ததாகவும் அங்கிருந்து LADY R3 படகு மூலம் கனடா செல்ல முயற்சித்ததாகவும் குறித்த படகில் இருந்த இலங்கையர் தெரிவித்துள்ளார்.
303 இலங்கையர்களும் ஒன்றாக மியன்மாருக்கு பயணித்தார்களா அல்லது குழுக்களாக பிரிந்து பயணித்தார்களா என்பது தௌிவின்றி உள்ளதுடன், அது தொடர்பிலான விசாரணைகள் கிடப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா செல்ல முயற்சித்தபோது கடலில் படகு பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வியட்நாமில் மூன்று முகாம்களில் அவர்கள் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தாம் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை திரும்புவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பான IOM அகதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன்போது, அவர்களை திருப்பி அனுப்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை என IOM இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நன்றி...
News1st
1 Comments
South Korea 카지노 사이트 is home to over 500 gorgeous golf courses, including the distinguished Jack Nicklaus Golf Club Korea in Incheon and New Korea Country Club in Goyang-si. Now you've got got} an e-wallet with an ATM card, correct ID paperwork, and a means around the ISP blocks, you’re able to entry international betting websites from Korea. If asked what the NETELLER bank wire is for, do not inform your bank betting or gambling.
ReplyDelete