Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அர்ஜென்டினாவை வீழ்த்தியதை முன்னிட்டு சவுதி அரேபியாவில் விசேட பொது விடுமுறை அறிவிப்பு...!

தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் கால்ப்பந்து உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதை முன்னிட்டு விசேட பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் உத்தியோக பூர்வ செய்திச் சேவையான சவுதி நிவ்ஸ் ஏஜென்ஸி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சவுதி மன்னர் சல்மான் அவர்கள் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் அனைத்து மட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் நடைபெற்றுவரும் 22வது ஃபீஃபா கால்ப்பந்து உலகக் கோப்பை போட்டிகளின், நேற்றைய போட்டியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் நோக்கிலேயே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments