Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மில்லெனிய சம்பவம் - அதிபர், பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்


பண்டாரகம, மில்லனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பலரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆராய கல்வி அமைச்சும் குழுவொன்றை நியமித்துள்ளது.

குறித்த பாடசாலையின் பல ஆசிரியர்கள் மற்றும் மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சிறுவர்களை தாக்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒரு திருட்டு தொடர்பாக பல ஆசிரியர்கள் சிறுவர்களை அடித்த பின்னர் மில்லனியா பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து சித்திரவதை செய்ததும் தெரியவந்தது.

குறித்த சிறுவர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமான முறையில் தாக்கியதாகவும் ஒரு மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments