நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. சமநிலையான டயட் மற்றும் வாழ்க்கைமுறை, அதனுடன் இன்சுலின் போன்ற தேவையான மருந்துகள் போன்றவை முறையாக கையாளப்பட்டாலும் நீரிழிவு நோயை எப்போதும் சீராக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
நீரிழிவு
நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி நிறைய வாழ்க்கைமுறைகளை கடைபிடிக்கவேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். வழக்கமான கண்காணிப்பு முதல் ஸ்கிரீனிங்,
மருத்துவரை அணுகி பரிசோதித்தல் போன்றவை மிகவும் அவசியம். உயர் ரத்த
அழுத்தம், சர்க்கரை காரணமாக எழும் பிற பிரச்னைகளால் அதிக மன அழுத்தம்,
சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றையும் எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு
தள்ளப்படுகின்றனர்.
நீரிழிவு நோயை எரித்தல் என்றால் என்ன?
இந்த வார்த்தைக்கு சரியான வரையறை இல்லை. ஆனால் அது மனச்சோர்வு மற்றும் சோர்வு உணர்வை உள்ளடக்கியது மற்றும் நிலைமையை நிர்வகிக்க தேவையான கவனிப்பு மற்றும் நிலைகளை உள்ளடக்கியது
என்கிறது அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் நர்சிங். நீரிழிவு நோயின் காரணமாக
உண்டாகும் சோர்வானது அனைவருக்கும் வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அது
ஒருவரை கவனித்துக்கொள்வது மற்றும் அவருடைய நீரிழிவு நோயை கவனித்துக்கொள்வதை
நிறுத்திவிடும்.
நீரிழிவு
எரிதலானது, உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி, உணர்ச்சி மற்றும்
உளவியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதே நேரத்தில் நீரிழிவு நோயைக்
கட்டுப்படுத்தும் திறனில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. உலகெங்கிலுமே
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சமாளிப்பதற்கான வழியை
தேடித்தேடி சோர்வடைகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
நீரிழிவு எரிதலின் அறிகுறிகள்
ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையில் நடப்பதைப் பொறுத்தே நீரிழிவு நோயின் அறிகுறிகளும் தன்மைகளும் மாறுபடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் இதனை கண்டறிய நிலையான அளவீடும் இல்லை. இருப்பினும் நீரிழிவுதனிநபர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள், மேலும் இந்த நிலைக்கு ஒரு நிலையான அளவீடு இல்லை. இருப்பினும், மக்கள் சில பொதுவான அறிகுறிகளைஅ அனுபவிக்கின்றனர்.
- நாள்பட்ட சோர்வு
- எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நீரிழிவு நோயால் விரக்தி உணர்வு, கோபம்
- தோல்வி உணர்வு
- நம்பிக்கையின்மை
- இயலாமை
- சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல்
- மன சோர்வு மற்றும் மன அழுத்தம்
- தூக்கமின்மை அல்லது இன்சோம்னியா
- தொடர் பரிசோதனை இல்லாமை
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஊசிகளை எடுத்துக்கொள்ளாமை
நீரிழிவு எரித்தல் என்பது மன சோர்வு அல்ல
நீரிழிவு
எரித்தல் மற்றும் மன சோர்வு இரண்டுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக
இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல. மனச்சோர்வின் பெரும்பாலான அறிகுறிகள்
வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் பாதிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
அதேசமயம் நீரிழிவு எரித்தல் என்பது மருத்துவ நிலையுடன் மட்டுமே
தொடர்புடையது. நீரிழிவு நோயாளிகளில் குறைந்தது 20-30 சதவீதம் பேர்
மனச்சோர்வுக் கோளாறுகளை அனுபவிக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.
நீரிழிவு எரித்தலை சமாளிப்பது எப்படி?
நீரிழிவு
நோயை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவு மன
ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.
நிலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள்:
நீரிழிவு
நோயை ஏற்றுக்கொள்வதும், வாழ்நாள் முழுவதும் அதனை கட்டுக்குள்
வைக்கவேண்டும் என்பதும் மிகவும் முக்கியம். இதனால் விரக்தி ஏற்பட்டாலும்
உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.
மருத்துவரிடம் ஓபனாக கலந்துரையாடுங்கள்:
நீரிவிழிவு
நோயை சமாளிக்க முடியாமல் திணறினால் அதுகுறித்து மருத்துவரிடம் தெளிவாக
பேசி தீர்வு காணுவது அவசியம். சோர்வுகள் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான்.
ஆனால் அதற்கு ஆதரவும், அக்கறையும் மிகவும் அவசியம். மருத்துவரிடம்
ஆலோசிக்கும்போது, நீரிழிவு எரிதல் எவ்வாறு வாழ்க்கையை பாதிக்கிறது என்பது
குறித்தும் பேசவேண்டும்.
உடல் ஆரோக்கியத்தின்மீது அக்கறை:
நீரிழிவு
நோயானது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தின்மீது
கவனம் செலுத்துவது அவசியம். எனவே தொடர் பரிசோதனை மற்றும் முறையாக
மருந்துகள் உட்கொள்ளுதல் அவசியம்.
தெரபி:
எரித்தல் உணர்வு மற்றும் அறிகுறிகள் தணியவில்லை என்றால், அது நீரிழிவு
பிரச்னையை மோசமாக்கலாம். எனவே மருத்துவர் உதவியை நாட வேண்டியது அவசியம்.
இதேபோன்ற சிரமங்களைக் கொண்டவர்களுடன் தொடர்பு கொள்ள வழிகாட்டலாம் அல்லது
ஆலோசனை வழங்கலாம்.
0 Comments