Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு...!



கோகுலராஜ் ஆணவக் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியல் சாதி ஒன்றைச் சேர்ந்த இவர் கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கலைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதி பெண் சுவாதி என்பவருடன் பழகியுள்ளார்.

இவர்கள்இருவரும் 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோவிலில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு கோகுல்ராஜ்வீடு திரும்பவில்லை. மறுநாள் தலை வேறு, உடல்வேறாக கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம்கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில்கண்டுபிடிக்கப்பட்டது.

கோகுராஜை ஆணவக் கொலை செய்ததாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், ஐந்து பேரை விடுதலை செய்தும்மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்புநீதிமன்றம் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தது

யுவராஜ்உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றகிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான ஐந்து பேருக்கு தண்டனை வழங்கக் கோரி உயிரிழந்த கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தவழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய இளம் பெண் சுவாதியை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உயர் நீதிமன்ற கிளைஉத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த நவம்பர் 25-ம் தேதியன்று, சுவாதியைபோலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரிடம், 23.6.2015 அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமராவில் பதிவான காட்சி காண்பிக்கப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும்பெண் நீங்கள் தானா, பக்கத்தில் இருப்பவர் யார் என்பது உள்ளிட்டபல்வேறு கேள்விகளை நிதிபதிகள் எழுப்பியிருந்தனர்.



வீடியோவில்இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல்தெரிகிறது. அதை உறுதியாக சொல்லமுடியாது என்று பதிலளித்திருந்தார்.

இதையடுத்துநீதிபதிகள், சத்தியம் என்றைக்கு வேண்டுமானாலும் சுடும் என்று சுவாதியிடம் கூறினர். பின்னர் விசாரணையை நவ.30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்று சுவாதி நேரில் ஆஜராக வேண்டும். அன்றைக்காவது உண்மையைச் சொல்ல முயற்சியுங்கள். அன்றும் இதே நிலை தொடர்ந்தால்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்' என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், மேல்முறையீடு மனு மீதான விசாரணைநீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்,என்.ஆனந்த் வெங்கடேஷ்அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு சுவாதி, கடந்த வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று பதிலளித்திருந்தார். இதனையடுத்து, தவறான தகவலை அளித்ததாக கூறி சுவாதி மீதுகுற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கநீதிபதிகள் உத்தரவிட்டனர்.



மதுரைஉயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் கோகுல்ராஜ்கொலை வழக்கு மேல்முறையீட்டு வழக்கின் கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞரான ப.பா.மோகன்செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோகுல்ராஜ்கொலை வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் ஏற்கனவே பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, இந்த வழக்கில் சுவாதி ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருந்தார். பின்னர் நாமக்கல் நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியாக மாறிய நிலையில் இது தொடர்பான வழக்கில்உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் விசாரணைக்கு வந்த போது சாட்சியத்தைமாற்றி கூறினார்.

நீதிபதிகள் வாய்ப்பு அளித்தும் மீண்டும் இன்று சாட்சியத்தை மாற்றி கூறியுள்ளார். இதனால் நீதிமன்ற அவமதிப்பு குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இரண்டு வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ப.பா.மோகன்தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு பின் சுவாதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments