Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இ.தொ.கா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்து சிவலிங்கம் காலமானார்

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்து சிவலிங்கம் காலமானார். 

இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் காலமான செய்தி கேட்டு,மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அவர் 1943.07.20 ஆம் திகதியன்று உடபுசல்லாவ ரப்பானை தோட்டத்தில் பிறந்து, ஆரம்ப கல்வியை உடபுசல்லாவ வித்தியாலயத்திலும் பின்னர் உயர் கல்வியை நுவரெலியா புனித கிறிஸ்தவ கல்லூரியிலும் பயின்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபாகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்கையை ஏற்று 1962 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி தலவாக்கலையில் தன்னை இ.தொ.காவுடன் இணைத்துக் கொண்டார். 

மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் கைக்கோர்த்து இ.தொ.காவை வெற்றி பாதையில் செல்ல வழிகாட்டி உள்ளார். இந்நாட்டின் வளர்ச்சிக்காக பல அமைச்சு பதவிகளை வகித்து பாரிய சேவைகளையும் முன்னெடுத்துள்ளார். 

எனது அரசியல் பிரவேசத்தின் போது அவரது அனுபவங்களின் ஊடாக பல அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளார். அவருடைய இழப்பு இ.தொ.காவிற்கு மாத்திரமல்லாது முழு மலையகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். அவருடைய இழப்பால் துயரும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Post a Comment

0 Comments