Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

டியோகோ கார்சியாவில் உள்ள இலங்கையர்களை மருத்துவ கிசிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப பிரிட்டன் தீர்மானம்..!


டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மருத்துவகிசிச்சைக்காக பிரிட்டன் ருவான்டாவிற்கு அனுப்பவுள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுஹியுமானேட்டேரியன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்குள்ளான 200க்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் 2021 முதல் ஐந்து படகுகளில் டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ளனர்.

இவர்களில் பலரை பிரிட்டிஸ் இந்தியன் ஓசன் டெரெட்டரி அதிகாரிகள் விமானங்கள் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

வேறு சிலர் படகுகளில் ரீயுனீயன் தீவிற்கு சென்றுள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எஞ்சியுள்ளவர்களை மருத்துவகிசிச்சைக்காக ருவான்டாவிற்கு அனுப்பவுள்ளதை உறுதி செய்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு சிகிச்சை முடிவடைந்ததும் குடியேற்றவாசிகள் மீண்டும் பிரிட்டிஸ் இந்தியன் ஓசன் டெரெட்டரிக்கு அழைத்துவரப்படுவார்கள் என தெரிவித்துள்ளது என நியு ஹியுமானேட்டடேரியன் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் பிரிட்டிஸ் அதிகாரிகள் டியாகோகார்சியாவில் உள்ள இலங்கை அதிகாரிகளை ருவான்டாவிற்கு நாடு கடத்தலாம் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பொறிஸ் ஜோன்சன் அரசாங்கத்தின் கீழ் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவான்டாவிற்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பிரான்சிலிருந்து வந்தவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையின் கீழ் 2022 இல் 40,000 பேர் ருவான்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments