Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வவுனியாவில் ஜனாதிபதியால் திறக்கப்பட்ட அலுவலகம்..!


ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் வவுனியாவில் இன்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, வைரவ புளியங்குளம், புகையிரத வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், குறித்த அலுவலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.இளங்கோபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைளையும், மக்களது பிரச்சனைகளையும் விரைவாக தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது.

இதன்போது, வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட பயனாளிகள் 32 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், போரால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு இழப்பீடுகளும், 10 விவசாயிகளுக்கு மானிய உரமும் ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments