Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கடவுச்சீட்டு கட்டணங்களில் மாற்றம்...!


எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், சாதாரண சேவை கட்டணத்தை 3,500 ரூபாவில் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 9,000 ரூபாவாகவும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் சாதாரண சேவைக் கட்டணம் 2,500 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாகும் அதிகரிக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments