கத்தார் பொது சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நவம்பர் மாதம் 10ம் திகதி முதல் இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயனிப்பவர்களுக்கு பின்வரும் உணவுப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்லுதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக விமானச் சேவை தெரிவித்துள்ளது.சமைக்காத கடல் உணவுப்பொருட்கள் குளிரூட்டப்பட்ட அல்லது உறைந்த உணவுப்பொருட்கள் சமைத்த அல்லது சமைக்காத உணவுப் பொருட்கள்
ஆகியவற்றை விமானத்தில் கொண்டு செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டமானது, இலங்கை மட்டுமல்லாது, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான, பிலிப்பைன்ஸ், மற்றும் லெபனான் போன்ற நாடுகளிலிருந்து கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கும் பொருந்தும் என்பதாக விமானச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
- சமைக்காத கடல் உணவுப்பொருட்கள்
- குளிரூட்டப்பட்ட அல்லது உறைந்த உணவுப்பொருட்கள்
- சமைத்த அல்லது சமைக்காத உணவுப் பொருட்கள்ஆகியவற்றை விமானத்தில் கொண்டு செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
கத்தாரிலுள்ள தங்களது உறவுகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்புபவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதோடு, கத்தார் பயணிப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெரும் பார்சல்களை முறையாக சோதனை செய்து கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
0 Comments