வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இன்று (20) வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகிய இருந்து கறைந்த காற்றழுத்த தாழ் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவில் மத்திய பகுதிகளில் காணப்படுகின்றது.
இது மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்தும் நகர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு வங்ககடலில் படிப்படியாக வலுவடைந்து காற்றழுக்க தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது
இதனால் நெட்டாங்கு 5 தொடக்கம் 20 பாகையிலும் அதநான்னு 80 தொடக்கம் 90 பாகைக்கும் இடைப்பட்ட கடல்பகுதிகளில் காற்றின் வேகம் வலுத்து 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை காற்று வீசும்.
இக்கடல் பிரதேசங்களில் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீற்றர்வரை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றதுடன் கடற்பரப்பின் மேல் மழையே அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்
காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடல் பரப்புக்களில் கடல் அலையின் வீதம் 2 தொடக்கம் 3 மீற்றர்வரையில் காணப்படும்.
எனவே காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்கு மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேற்குறிய கடல் பகுதிகளில் மீன்பிடிப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறித்தப்படுகின்றார்கள். இது தொடர்பாக வளிமண்டல திணைக்களத்தால் வெளியிடப்பட்ட எதிர்கால முன்னறிவிப்புக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தென் மேற்கு வங்காள விரிகுடாவிலும் அதன் ஒட்டிய வங்காள விரிகுடாவிலும் உருவாகி இருக்கின்ற தாழ் அமுக்கம் காரணமா நாட்டின் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ் அப் போது மணித்திலாயத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்ய கூடும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான கால நிலை காணக்கூடும் என அவர் தெரிவித்தார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments