Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இனி வாட்ஸ்அப்-ல் Poll போடலாம்; ஆன்லைனிலிருந்து கொண்டே ஆஃப்லைன் காட்டலாம்! எப்படி தெரியுமா?


வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஆக, பல்வேறு செல்போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. உடன், Poll போடும் வசதி, ஆன்லைனிலிருந்து கொண்டே சிலருக்கு ஆஃப்லைன் காட்டும் வசதி என பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய புதிய அப்டேட்டுகளை வாட்ஸ்அப் கடந்து சில வாரங்களாக வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது இரண்டு செல்போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது வாட்ஸ்அப். இந்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.



இதேபோல லாக் இன் ஆக்டிவிட்டையை சரிபார்க்கவும், ஒரு வாட்ஸ் அப் கணக்கு எத்தனை சாதனங்களில் செயல்படுகிறது என்பதை சரிபார்க்கும் அம்சத்தையும் வாட்ஸ் அப் வழங்குகிறது.

முன்னதாக நேற்றைய தினம்தான், வாட்ஸ்-அப்பில் Poll வசதி செய்யப்பட்டிருந்தது. தனிநபர் மெசேஜ்கள், க்ரூப் மெசேஜ் என அனைத்திலும் இந்த வசதி இருந்தது. இதில் 2 முதல் 12 ஆப்ஷன்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என சொல்லப்பட்டிருந்தது. அதேபோல, ஒருநபரே எத்தனை பதில்களுக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதை பயன்படுத்தும் வழி:இதேபோல, ஆன்லைனில் இருக்கும்போதே, ஒருவருக்கு ஆஃப்லைன் என காட்டும் வசதியும் வாட்ஸ்-அப்பில் சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மிகவும் எளிதுதான். நாம் எப்படி நம்முடைய Last seen-ஐ மறைக்கிறோமோ, அதே வழியில் Settings > Privacy > Last Seen சென்றால், அதில் Online selection என்றொரு ஆப்ஷன் இருக்கும். அதில் நாம் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்துகொள்ளலாம். இதை பயன்படுத்தும் வழி, வீடியோவாக:

இப்படியாக வாட்ஸ்-அப் புதுப்புது அப்டேட்களை கொண்டு வந்து, தன் பயனர்களை கவர்ந்து வருகிறது!

Post a Comment

0 Comments