Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



13 கதாபாத்திரங்களில் சூர்யா ? வெளியான புதிய தகவல்…!


நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 2023-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments