இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள சேமேரூ எரிமலை இன்று காலை வெடித்துள்ளது.
இதனால், எரிமலை உச்சியிலிருந்து 1.500 மீற்றர் உயரத்துக்கு, அதாவது கடல் மட்டத்திலிருந்து 5,176 மீற்றர் உயரத்துகு சாம்பல் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள சேமேரு எரிமலை சுமார் 3600 மீற்றர் உயரமானது. அத்தீவின் மிக உயரமான மலை இதுவாகும்.
இந்த எரிமலை வெடிப்பையடுத்து, அபாய எச்சரிக்கைச் நிலை 4 ஆவது மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
அதாவது, எரிமலை வெடிப்பினால், அருகிலுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது என இந்தோனேஷியாவின் எரிமலை, மற்றும் பூகோளவியல் அனர்த்த தணிப்பு மத்திய நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments