Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம்...!


ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

இறப்புகள் அதிகம் இருப்பதால், அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டு அந்நாட்டில் 8,11,604 பிறப்புகளும் 14,39,809 இறப்புகளும் பதிவாகின.

இந்நிலையில், நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்குகிறது.

அதன் ஒரு பகுதியாக, குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4,20,000 யென் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த மானியத்தை 80,000 யென் அதிகரித்து 5 இலட்சம் யென்னாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Katsunobu Kato தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments