அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை கொடுப்பனவுகளை வழங்கலாம் என திறைசேரியின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுகள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு சிறப்பு சுற்றறிக்கை மூலம் திறைசேரியின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையில் கூறப்பட்ட பொது நிறுவனம் மூலதனம் அல்லது தொடர் செலவினங்களுக்காக திறைசேரியிலிருந்து நிதியைப் பெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments